பக்கம் எண் :

முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை
யின்மை புகுத்தி விடும்.

 

முயற்சி திருவினை ஆக்கும் -விடாமுயற்சி செல்வத்தை உண்டாக்கவும் வளர்க்கவுஞ் செய்யும்; முயற்று இன்மை இன்மை புகுத்திவிடும் -அம்முயற்சியில்லாமை ஒருவனை வறுமைக்குட் செலுத்திவிடும்.

அரசனுக்குப் படைகுடி கூழமைச்சு நட்பரண்களும் நாடும் சிற்றரசும் செல்வமாகக் கருதப்பெறும். வறுமை அவற்றின் குறைவும் அரசிழப்புமாகும்.