பக்கம் எண் :

பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
தாள்வினை யின்மை பழி.

 

பொறி இன்மை யார்க்கும் பழி அன்று -மேன்மைக்கு ஏதுவாகிய ஊழின்மை ஒருவர்க்கும் குற்றமாகாது ; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி -அறியவேண்டியவற்றை யறிந்து செய்யவேண்டிய வினைகளை விடாமுயற்சியொடு செய்யாமையே குற்றமாவது.

அறியவேண்டுவன நால்வகைவலி , காலம் , இடம் முதலியன. ஒருவன் முற்பிறப்பிற் செய்தவினை செய்தவனாலும் அறியப்படாமையாலும் , பெரும்பாலும் நல்லோர் வறியநிலையிலும் தீயோர் செல்வ நிலையிலும் இருப்பதாலும் , சிலவினைகட்கு ஒரே முயற்சியும் , சிலவினைகட்குப் பலமுயற்சியும் சிலவினைகட்கு விடாமுயற்சியும் வேண்டியிருப்பதனாலும் ,ஊழ்பற்றியன்றி வினைபற்றியே மக்கட்குப் புகழும் பழியும் உண்டாம் என்பதாம்.