பக்கம் எண் :

செயற்கை யறிந்தக் கடைத்து முலகத்
தியற்கை யறிந்து செயல்.

 

செயற்கை அறிந்தக் கடைத்தும் -நூலறிவால் வினை செய்யுந் திறங்களை அறிந்த விடத்தும்; உலகத்து இயற்கை அறிந்து செயல் - உலகியலை - அறிந்து அதனொடு பொருந்தச் செய்க.

பலசெய்திகளில் உலகியலும் நூலியலும் வேறு பட்டிருப்பதால், உலகியலொடு பொருந்தாதவற்றைச் செய்யற்க; செய்யின் உலகம் பழிக்கும் என்பதாம். 'கடைத்து' என்பதில் 'து' முதனிலைப் பொருளீறு (பகுதிப்பொருள் விகுதி). "பள்ளிக் கணக்கு புள்ளிக் குதவாது." என்னும் பழமொழியும்,

"உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்."

(140)

என்னுங் குறளும், இங்குக் கவனிக்கத் தக்கன.