பக்கம் எண் :

ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

 

ஆக்கமும் கேடும் அதனால் வருதலான் - தன் அரசனுக்கு அவன் அரசுறுப்புக்கட்கும் மேம்பாடும் அழிவும் தன் சொல்லால் வருமாதலால்; சொல்லின்கண் சோர்வு காத்து ஓம்பல் - அமைச்சன் தன் சொல்லில் தவறு நேராவாறு போற்றிக்காக்க.

"முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே."

(தொல். கிளவி. 39)

என்பதால் சுட்டுப்பெயர் முன்வந்தது. பிறர் சொல்தவறுபோலாது அமைச்சன் சொல்தவறு நாடு முழுவதற்கும் கேடு விளைக்குமாதலால் , 'காத்தோம்பல் சொல்லின்கட்சோர்வு' என்றார். "ஒருசொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்." "நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும்." என்பன பழிமொழிகள்.