பக்கம் எண் :

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லை
வெல்லுஞ்சொ லின்மை யறிந்து.

 

சொல்லைப் பிறிது ஓர் சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்து - தாம் சொல்லக் கருதிய சொல்லை வெல்லக்கூடிய வேறொரு சொல்லில்லாமை யறிந்து; அச்சொல்லைச் சொல்லுக - பின்பு அச்சொல்லைச் சொல்லுக.

'பிறிதோர் சொல்' பகைவரின் மறுப்புச்சொல். சொல் என்பது தனிச்சொல்லிற்கும் கூற்றிற்கும் பொதுவாம். வெல்லுதல் உண்மை யுணர்த்துவதிலும் ஏதுக்கள் கூடிய ஏரணவலிமையிலும் மிகுந்து எதிரிகள் கூற்றைப் பொருளற்ற தெனக்காட்டுதல். இதில் வந்துள்ளது சொற்பொருட் பின்வருநிலையணி. இனி , பிறிதோர் சொல்லும் வெல்லுஞ்சொல்லும் என இரண்டாகக் கொண்டு. "ஒத்தசொல்லும் மிக்க சொல்லு முளவாகாமற் சொல்லுக." என்றுரைப்பதுபொருந்தாதாம்.