பக்கம் எண் :

குழலினி தியாழினி தென்பதம் மக்கண்
மழலைச் சொற் கேளா தவர்.

 

தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் - தம் குழந்தைகளின் குதலைச் சொற்களைக் கேட்டறியாதவர்; குழல் இனிது யாழ் இனிது என்ப-புல்லாங்குழலிசை இனிதென்றும் செங்கோட்டியாழிசை இனிதென்றுங் கூறுவர்.

'குழல்' 'யாழ்' என்பன ஆகுபெயர். ஈரிசையினும் மழலைச்சொல் இனிதென்பது காதல்பற்றிய உயர்வு நவிற்சியே. செங்கோட்டியாழ் குடத்தின்மேல் போர்க்கப்பட்ட பண்டை வீணை.