பக்கம் எண் :

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்க
ணூறெய்தி யுள்ளப் படும்.

 

வீறு எய்திமாண்டார் வினைத்திட்பம்-சூழ்வினையால் மேம்பட்டுப் பிறவிலக்கணங்களாலும் மாட்சிமைப் பட்ட அமைச்சரின் வினைத்திண்மை;வேந்தன் கண் ஊறு எய்தி உள்ளப்படும்-பயனளவில் அரசனையடைதலால் அவனாலும் பிறராலும் மதிப்பொடு கருதப்பெறும்.

பிறவிலக்கணங்கள் கச-ஆம் அதிகாரத்தில் முதல் ஆறு குறள்களிலுஞ் சொல்லப்பட்டனவாம். 'வேந்தன்க ணூறெய்தல்' - வினைத்திட்பத்தால் விளைந்த செல்வமும் புகழும் அரசனை யடைதல். ஊறெய்தல்-உறுதல். உறுவது ஊறு. உறுதல்-அடைதல்.