பக்கம் எண் :

தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்

 

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை கல்வித் திறமையுள்ள தன் மகனுக்குச் செய்யவேண்டிய நன்மையாவது; அவையத்து முந்தி இருப்பச் செயல் - கற்றோரவையின்கண் முதன்மையாயிருக்குமாறு அவனைச் சிறந்த கல்விமானாக்குதல்.

மகனைச் செல்வனாக்குவதிலுங் கல்விமானாக்குவது சிறந்தது என்பது கருத்து. 'சான்றோ னாக்குதல தந்தைக்குக் கடனே '. என்றார் பொன்முடியாரும். ( புறம். 312)