பக்கம் எண் :

செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையு மவித்தொழுக
லான்ற பெரியா ரகத்து.

 

ஆன்ற பெரியாரகத்து- வலிமை நிறைந்த அரசரருகில் இருக்கும்போது ; செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் - அவர்காண ஒருவர் காதிற்குள் மெதுவாகச் சொல்லுதலையும் ஒருவர் முகம் நோக்கிச் சிரித்தலையும் அடியோடு விட்டுவிடுக.

'சேர்ந்த நகை' என்றதனால் பிறரொடு கூடிச் சிரித்தலும் அடங்கும். செவிச் சொல்லும் சேர்ந்த நகையும் தம்மைப்பற்றியே நிகழ்ந்தனவாகக் கருதிக் கடுஞ்சினங் கொள்ளின் அன்றே அழித்துவிடும் ஆற்றலராதலின், 'ஆன்ற பெரியார்' என்றும் 'அவித்தொழுகல்' என்றும்,கூறினார்.