பக்கம் எண் :

கற்றறிந்தார் கல்வி விளங்குங் கசடறச்
சொற்றெரிதல் வல்லா ரகத்து.

 

கசடு அறச் சொல் தெரிதல் வல்லாரகத்து -வழுவின்றிச் சொற்பொழிவுகளை ஆராய வல்ல அறிஞரவைக்கண் உரை நிகழ்த்தின்; கற்று அறிந்தார் கல்வி விளங்கும் -பலநூல்களையுங் கற்று அவற்றின் பொருளை அறிந்தவரின் கல்வி விளங்கித்தோன்றும்.

சொல் என்றது சொற்பொழிவை. உரை நிகழ்த்தின் என்பது அவாய் நிலையால் வந்தது.

"புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புன லூர பொதுமக்கட் காகாதே
பாம்பறியும் பாம்பின கால்."

(பழமொழி, 7).