பக்கம் எண் :

புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க நல்லவையு
ணன்கு செலச்சொல்லு வார்.

 

நல் அவையுள் நன்கு செலச் சொல்லுவார் - நல்ல அறிஞரவைக்கண் நல்ல பொருள்களை அவர் மனங்கொள்ளச் சொல்ல வல்லார்; புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க - அறிஞரில்லாச் சிறியோ ரவைக்கண் அவற்றை மறந்துஞ் சொல்லாதிருக்க.

சொல்லின், பன்றிக்குமுன் முத்தைப் போடுதலென்று நல்லவையும், பொருள் விளங்காமையிற் புல்லவையும் பழித்தலால் , இருசாரார்க்கும் ஆகாமை கருதிப் 'பொச்சாந்துஞ் சொல்லற்க' என்றார்.