பக்கம் எண் :

பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல்

 

அவையகத்து அஞ்சும் அவன் கற்ற நூல்-அவைக்கு முன்நின்று அதற்கு அஞ்சி நடுங்குபவன் கற்ற நூல்; பகையகத்துப் பேடிகை ஒள்வாள்-போர்க்களத்தில் நின்று போருக்கஞ்சும் கோழையன் பிடித்த கூர்வாளை யொக்கும்.

இயற்கைப் பேடியரும் செயற்கைப் பேடியரும் எனப் பேடியர் இருவகையர். செயற்கைப் பேடியர் உவளகக் காவற்கும் பேடிமைக்கும் பேடியராக்கப்பட்ட ஆடவராக்கப்பட்ட ஆடவராதலின், அவருள் மறவருமுளர். ஆதலால், பேடி என்பதற்குக் கோழையன் என்று பொருள் கூறப்பட்டது. அமர்க்கோழை வாளும் அவைக் கோழை நூலும் பயன் படாவென்பது கருத்து.