பக்கம் எண் :

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையு
ணன்கு செலச்சொல்லா தார்.

 

நல் அவையுள் நன்கு செலச் சொல்லாதார்-தாம்கற்ற நல்ல பொருள்களை நல்லறிஞர் இருந்த அவைக்கண் தாம் கொண்ட அச்சத்தினால் அவர்க்கு விளங்குமாறு எடுத்துச் சொல்லும் ஆற்றலில்லாதார்; பல்லவை கற்றும் பயம் இலரே-பல நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே யாவர்.

கற்றோர் கல்வியைக் கற்றோரே அறிவராதலின், கற்றோர்முன் சொல்லாத கல்வி தமக்கேயன்றிப் பிறர்க்குப் பயன்படா தென்பதாம். உம்மை உயர்வுசிறப்பு. ஏகாரம் தேற்றம்.