பக்கம் எண் :

பெரும்பொருளாற் பெட்டக்க தாகி யருங்கேட்டா
லாற்ற விளைவது நாடு.

 

பெரும்பொருளால் பெள்தக்கது ஆகி - பல்வகைப் பொருள் வளமிகுதியாற் பிற நாட்டாராலும் விரும்பப்படுவதாய்; அருங்கேட்டால் - கேடில்லாமையோடுகூடி; ஆற்ற விளைவது நாடு - நானிலச்செல்வமும் மிகுதியாக விளைவதே வறுமை யில்லாத நாடாவது.

பெருமை பொருளின் அளவையும் வகைகளையும் தழுவிநின்றது. கேடாவன மிகுமழை, மழையின்மை, எலி, விட்டில், கிளி, பகையரசுண்மை என ஆறென்றும்; வெட்டில், கிளி, யானை, காட்டுப்பன்றி, தொட்டியர். கள்வர், பெரும்புயல் என ஏழென்றும்; விட்டில், கிளி, யானை, தன்னரசு (Autocracy), வேற்றரசு, மழையின்மை, கடுமழை, கடுங்காற்று என எட்டென்றும்; மூவகையிற் சொல்லப்படும்.

"மிக்கபெய லோடுபெய லின்மையெலி விட்டில்கிளி
யக்கணர சண்மையோ டாறு"
வெட்டில் கிளியே நாவா யேனம்
தொட்டியர் கள்வர் சோனைப் பெரும்புயல்
நட்டம் நாட்டேழ் குற்ற மாகும்." (பிங்.3:7)
"விட்டில் கிளிநால்வாய் தன்னரசு வேற்றரசு
நட்டம் கடும்புனல்கா லெட்டு"


கேடருமை யென்பது ' அருங்கேடு' எனச் செய்யுளில் முறைமாறி நின்றது. கேடுகளுள் இயற்கையாய் வருவன செங்கோலாலும் இறைவழிபாட்டாலும், யானையால் வருவது வேட்டையாலும், அரசரால் வருவது குடிகளின் எதிர்ப்பாலும் போராலும், நீக்கப்படும். நானிலச் செல்வமான, நாடுபடு செல்வமும் காடுபடு செல்வமும் மலைபடு செல்வமும் அலை (கடல்) படுசெல்வமுமாம்.