பக்கம் எண் :

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.

 

வேந்து அமைவு இல்லாத நாடு-அரசனோடு பொருந்துத லில்லாத நாடு; ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே-மேற் கூறியவாறு எல்லா நலங்களும் அமைந்திருந்ததாயினும் அவற்றாற் பயனில்லாததே யாகும்.

'வேந்தமைவு' என்பது குடிகள் அரசனொடு பொருந்துதலும் அரசன் குடிகளொடு பொருந்துதலுமாகிய இருதலையன்பையுங்குறிக்கும். இனி, 'வேந்தமைவில்லாத' என்பதற்கு நல்லரசன் வாய்த்தலில்லாத என்றுரைப்பினுமாம். தந்தைக்கும் மக்கட்கும் நேர்த்தமில்லாத குடும்பம் கெடுவதுபோல, அரசனுக்கும் குடிகட்கும் நேர்த்தமில்லாத நாடு கெடும் என்பது கருத்து. இவ்விரு குறள்களாலும் நாட்டின் குற்றங் கூறப்பட்டது. உம்மை உயர்வு சிறப்பு. ஏகாரம் தேற்றம்.


உறுப்பியலின் 2-ஆம் பகுதியான நாட்டியல் முற்றும்.