பக்கம் எண் :

நிலைமக்கள் சால வுடைத்தெனினுந் தானை
தலைமக்க ளில்வழி யில்.

 

நிலை மக்கள் சால உடைத்து எனினும்-போரிற் பின்வாங்காது நிலைத்து நிற்கும் மறவரை மிகுதியாகக் கொண்டிருப்பினும்; தலைமக்கள் இல்வழித்தானை இல்-தனக்குத் தலைவராகியவயவர் (வீரர்) இல்லாவிடத்துப் படை நிற்காது.

படையைப் பயிற்றவும் போருக்கு நடத்திச் செல்லவும் போர்க்களத்தில் ஏவிப் போர் செய்விக்கவும், தலைவர் இன்றியமையாமையால், 'தலைமக்க ளில்வழி யில்' என்றார். இதனால், படைத்தலைவரின் தனிச்சிறப்புக் கூறப்பட்டது. தலைவனில்லாப்படை தலையில்லாவுடம்பு போன்ற தென்பது கருத்து.