பக்கம் எண் :

அன்பகத் தில்லா வுயிர் வாழ்க்கை வன்பாற்கண்
வற்றன் மரந்தளிர்த் தற்று.

 

அகத்து அன்பு இல்லா உயிர்வாழ்க்கை - உள்ளத்தில் அன்பில்லாத வுயிர் இல்லற வாழ்க்கை நடாத்துதல்; வன்பாற்கண்வற்றல் மரம் தளிர்த்த அற்று-பாலை நிலத்தின் கண் பட்டுப்போன மரம் தளிர்த்தாற் போலும்.

நடவாத தென்பதாம். ' வற்றல் ' தொழிலாகு பெயர். ' வற்றன் மரம்' இருபெயரொட்டு அன்னது - அற்று. அன்பில்லா மக்களை உயிர் என்றது இழிவுக் குறிப்பு.