பக்கம் எண் :

நவிறொறு நூனயம் போலும் பயிறொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

 

பண்பு உடையாளர் தொடர்பு-பண்பட்ட மேலோர் தம்முட் செய்யும் நட்பு; பயில்தொறும்-பழகப்பழக; நூல் நவில்தொறும் நயம் போலும்-சிறந்த நூல் கற்கக்கற்கக் கற்றார்க்கு இன்பந்தருவதுபோல் இன்பஞ் செய்வதாம்.

நயத்தல் விரும்புதல் அல்லது மகிழ்தல், நயக்கப்படுவது நயமெனப்பட்டது. மேன்மேல் வளரும் நட்பின் தன்மை இங்குக் கூறப்பட்டது.