பக்கம் எண் :

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு.

 

முகம் நக நட்பது நட்பு அன்று-கண்டவிடத்து அகமன்றி முகம் மட்டும் மலர நட்பது நட்பாகாது; நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு-அன்பால் உள்ளமும் மலருமாறு நட்பதே உண்மையான நட்பாவது.

இறந்தது தழுவிய எச்சவும்மை தொக்கது. அகமும் முகமும் ஒருங்கே மலர்வதே நட்பென்றவாறு.