பக்கம் எண் :

உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே
யிடுக்கண் களைவதா நட்பு.

 

உடுக்கை இழந்தவன் கைபோல-அவையிடை ஆடையவிழ்ந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று திருத்தி அம்மானக் கேட்டை நீக்குவதுபோல; ஆங்கே இடுக்கண் களைவது நட்பு ஆம்-நண்பனுக்குத் துன்பம் வந்தவிடத்து அப்பொழுதே சென்றுதவி அதை நீக்குவதே ஒருவனுக்கு உண்மையான நட்பாகும்.

'ஆங்கே' என்பது உடுக்கை திருத்தற்கும் இடுக்கண் களைதற்கும் பொதுவாக இடையில் நின்றது. விரைந்து நீக்குவதென்பது இவ்வுவமையின் பொதுத்தன்மை. மானங் காத்தற்கண் ஒருவன் கை தன் மனத்தினும் முற்படுமென்னும் பரிமேலழகர் கூற்று, உளநூற்கு ஒத்ததன்று. 'உடுக்கை' தொழிலாகுபெயர்.