பக்கம் எண் :

மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்து
மொருவுக வொப்பிலார் நட்பு.

 

மாசு அற்றார் கேண்மை மருவுக-மேற்கூறிய குற்றமொன்றும் இல்லாதவருடைய நட்பையே பயிலுக; ஒப்பு இலார் நட்பு ஒன்று ஈத்தும் ஒருவுக-அறியாமை கரணியமாக உள்ளத்தால் பொருந்தாதவரொடு செய்துகொண்ட நட்பை அவர் விரும்பிய தொன்றைக் கொடுத்தாயினும் விட்டுவிடுக.

மாசற்றார் கேண்மை இருமையின்பமும் பயத்தலால் 'மருவுக' என்றும், மாசுற்றார் கேண்மை இருமைத் துன்பமும் விளைத்தலால் "ஒருவுக" என்றும், கூறினார். சிற்றிழப்பாற் பேரிழப்பைத் தடுப்பது அறிவுடைமையேயாதலால், 'ஒன்றீத்து மொருவுக' என்றார். இதனால் கொள்ளுவதும் தள்ளுவதுமான இருவகை நட்புங் கூறப்பட்டன.