பக்கம் எண் :

கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்க நட்டார் செயின்.

 

கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு - பழைமையான நண்பர் செய்த தவற்றைத் தாமாகவன்றிப் பிறர் சொன்னாலும் பொருட்படுத்தாத நட்புரிமையறிய வல்லார்க்கு; நட்டார் இழுக்கம் செயின் நாள் - அந்நண்பர் தவறு செய்யின் அந்நாள் நன்னாளாம்.

'கேள்' வகுப்பொருமை. தவறுகள் இவ்வதிகார முதற்குறளுரையிற் கூறப்பட்டன. கேட்டல் கேட்டு அதற்குத்தக்கனை செய்தல். 'கெழுதகைமை வல்லார்' ஒரு சொற்றன்மைப்பட்ட கூட்டுப்பெயர். தவறு செய்யும்நாள் நட்புரிமை வெளிப்படுத்துதலின், அறிவுடையன்பர் கண்ணோட்டம் பற்றி அதை மகிழ்ச்சி மனப்பான்மையோடு நோக்குவர் என்பதாம்.