பக்கம் எண் :

உறுவது சீர்தூக்கு நட்பும் பெறுவது
கொள்வாருங் கள்வரு நேர்.

 

உறுவது சீர்தூக்கும் நட்பும் - நட்கப்படுவாரின் நலத்தையும் அருமையையும் நோக்காது அவரால் தமக்கு வரும் பயனை மட்டும் அளந்து பார்க்கும் தந்நல நண்பரும்; பெறுவது கொள்வாரும் - கொடுப்பவரை உள்ளத்திற் கொள்ளாது அவர் கொடுக்கும் பொருளை மட்டும் மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளும் விலைமகரிரும்; கள்வரும் - பிறர்கேட்டையும் அவர் படுந்துன்பத்தையும் நோக்காது தமக்குக் கிடைக்கும் பொருளை மட்டும் நோக்கிக் களவு செய்வாரும்; நேர் - தம்முள் ஒத்தவராவர்.

தந்நலமே கருதிப் பிறர்பொருளை வஞ்சித்துப் பெறுதலில் மூவரும் ஒத்தலின் ' நேர் ' என்றார். ' நட்பு' ஆகு பொருளி.