பக்கம் எண் :

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
யெய்தலி ணெய்தாமை நன்று.

 

செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை - பாதுகாப்புத் தருமென்று கருதிச் செய்துவைத்தாலும் பாதுகாப்பாகாத கீழோரது தீ நட்பு; எய்தலின் எய்தாமை நன்று - பெற்றிருப்பதிலும் பெற்றிராமையே நல்லது.

'எய்தலினெய்தாமை நன்று' என்பதைத் ' தமரிற் தனிமை தலை' என்பதுபோற் கொள்க. ' சாரா ' என்னும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ' புன்கேண்மை ' என்னும் பெயரைத் தழுவிற்று.' சிறியவர் ' இடைப்பிறிதுவரல். சிறப்பும்மை தொக்கது.