பக்கம் எண் :

எனைத்துங் குறுகுத லோம்பன் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு.

 

மனைக் கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு-இல்லத்தில் தனியே யிருக்கும்போது அன்பர்போல் நட்பாடி, அம்பலத்திற் பலரோடு கூடியிருக்கும்போது பகைவர்போற் பழிகூறுவார் நட்பு, எனைத்தும் ஓம்பல்-எள்ளளவுந் தம்மை அணுகாதபடி காத்துக்கொள்க.

தனித்திருக்கும்போது பழிப்பினும் பிறரோடு கூடியிருக்கும் போது புகழ்வதே நல்ல நண்பர் செயலாம். அதற்கு மாறாக விருப்பதொடு கண்முன் துணிந்து முரண்படுவதால், அவர் பகைவரொடு கூடி அழிவுண்டாக்காதவாறு முழுவிழிப்புடன் முற்காப்பாக விருக்க வேண்டுமென்பார் எனைத்துங் குறுகுதல் ஓம்பல் என்றார். கெழீஇ இன்னிசை யளபெடை.