பக்கம் எண் :

இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.

 

இனம் போன்று இனம் அல்லார் கேண்மை - இனத்தார் போன்றிருந்து உண்மையில் இனத்தார்க்குரிய அன்பில்லாத கரந்த பகைவர் நட்பு; மகளிர் மனம்போல வேறுபடும் - விலைமகளிர் மனம்போல வேறுபடும்.

நட்பு வேறுபடுதலாவது கரந்த பகை வெளிப்படையாதல். மகளிர் என்னும் பொதுச்சொல் இடத்திற்கேற்ப விலைமகளிரைக் குறித்தது. விலைமகளிர் காதல் போலக் கரந்த பகைவர் நட்பு வேறுபடுமென்பதாம். முன்னவர் பன்முறையும் பின்னவர் ஒருமுறையும் வேறுபடுவதே வேற்றுமை.