பக்கம் எண் :

மனத்தி னமையா தவரை யெனைத்தொன்றுஞ்
சொல்லினாற் றேறற்பாற் றன்று.

 

மனத்தின் அமையாதவரை-உள்ளத்தால் தம்மோடு பொருந்தாதவரை; எனைத்து ஒன்றும்-எத்தகைய வினையிலும்; சொல்லினால் தேறற்பாற்று அன்று-அவர் சொல்லைக்கொண்டு அவரை நம்பத்தக்க முறைமைத்தன்று அரசியல் நூல்.

'எனைத்தொன்றும்' என்பதற்கு, எத்துணைச் சிற்றளவும் என்று உரைப்பினும் அமையும், அன்மைச்சொல் அரசியல் நூல் என்பதை அவாவி நின்றது. பகைமையை மறைத்துச் சொல்லும் வஞ்சனைச் சொல்லை மெய்யென்று கொண்டு, அவரை எவ்வினைக்கும் நம்புவது அரசியல்நூல் முறைமையன் றென்பதாம்.