பக்கம் எண் :

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று.

 

வைகலும் வருவிருந்து ஓம்புவான் வாழ்க்கை - நாள்தோறும் தன்னை நோக்கி வருகின்ற விருந்தினரைப் பேணுவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று - வறுமையால் துன்புற்றுக்கெடுதல் இல்லை.

இது நாட்டு வளத்தையும் இல்லறத்தானின் செல்வநிலையையும் பொறுத்தது.