பக்கம் எண் :

ஏவவுஞ் செய்கலான் றான்றேறா னவ்வுயிர்
போஒ மளவுமோர் நோய்.

 

ஏவவுஞ் செய்கலான்-புல்லறிவாளன் தனக்கு நன்மையானவற்றை அறிவுடையார் செய்யச்சொல்லினுஞ் செய்வதில்லை; தான் தேறான்-தானாகவும் தனக்கு நன்மையானவற்றை அறிந்துகொள்வதில்லை; அவ்வுயிர்போம் அளவும் ஓர் நோய்-அத்தகையவன் உயிர் உடம்பினின்று நீங்குமளவும் அவனைத்தாங்கும் உறவினர்க்கெல்லாம் ஒப்பற்ற கொடிய நோயாம்.

தன்மதியும் சொன்மதியும் இல்லாதவன் அஃறிணைத் தன்மைப் பட்டு நிற்றலின் 'அவ்வுயிர்' என்றும், அவனால் வருந்தொல்லை வாழ்நாள் முழுதுந்தொடர்தலின் 'போஓமளவும்' என்றும், நோய் போல் துன்பந்தருதலின் 'நோய்' என்றும், கூறினார். உம்மை எச்சம். 'போஒம்' இசைநிறையளபெடை.