பக்கம் எண் :

காணாதாற் காட்டுவான் றான்காணான் காணாதான்
கண்டானாந் தான்கண்ட வாறு.

 

காணாதாற் காட்டுவான் தான் காணான்- தன்னைப் பேரறிவாளனாகக் கருதுவதால் பிறர் வாயிலாக ஒன்றறியுந் தன்மையில்லாத புல்லறிவாளனுக்கு அறிவு புகட்டப் புகுந்தவன் அவனாற் பழிக்கப்பட்டுத் தான் அறியாதவன் என்னும் நிலைமையையே அடைவன்; காணாதான் தான் கண்டவாறு கண்டான் ஆம்- அவ்வறியுந்தன்மை இல்லாதவனோ, தான் அறிந்தவகையே சரியென்று நம்புவதால் , இறுதியில் தான் முன்பு அறிந்தவாறே அறிந்தவனாக முடியும்.

புல்லறிவாளனுக்கு நல்லறிவு கொளுத்தும் வகை இல்லையென்றவாறு. இதில் வந்துள்ளது சொற்பொருட் பின்வருநிலையணி.