பக்கம் எண் :

இகல்காணா னாக்கம் வருங்கா லதனை
மிகல் கேடு தரற்கு.

 

ஆக்கம் வருங்கால் இகல் காணான் - ஒருவன் தனக்கு ஆக்கம் வருங்காலத்தில் மாறுபாடு கொள்ளுதற்குக் கரணியம் ஏற்படினும் அதைக் கொள்ளக் கருதான்; கேடுதரற்கு அதனை மிகல் காணும்- தனக்குக் கேட்டை வருவித்தற்குக் கரணியமின்றியும் அம்மாறுபாட்டில் மேற்படுதலைக் கருதுவான்.

ஆக்கம் ஊழால் வருவது தோன்ற 'வருங்கால்' என்றும், கேடும் அதனால் தானே வருவித்தல் தோன்றத் 'தரற்கு' என்றும், கூறினார். 'மிகல்காணும்' என்பதும் 'மிகலூக்கின்' என்பதுபோல ஒரு சொற்றன்மைப்பட்ட செயப்படுபொருள் குன்றாவினையாம்.