பக்கம் எண் :

நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கு மெளிது.

 

வெகுளி நீங்கான்-சினத்தை விடாதவனாகவும்; நிறை இலன் - அடக்கமில்லாதவனாகவு மிருப்பவன்மேற் செல்லுதல்; எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது-எக்காலத்தும் எவர்க்கும் எளிதாம்.

’நிறை' மறை பிறரறியாவாறு மனத்தில் நிறுத்துதல் நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை (கலித்.133). சினத் தன்மையனாகவும் மறைவெளிப்படுத்துபவனாகவு மிருத்தலால், அவன்மேற் சென்று பொருது வெல்லுதற்குக் காலமும் இடமும் வலியுமறிந்து செல்லுதல் வேண்டாதாயிற்று. "இனி, இனிதென்று பாடமோதி அவன் பகைமை இனிதென்றுரைப்பாரு முளர்." என்று பரிமேலழகர் ஒரு பாடவேறுபாடு காட்டுவர்.