பக்கம் எண் :

கல்லான் வெகுளுஞ் சிறுபொரு ளெஞ்ஞான்று
மெல்லானை யொல்லா தொளி.

 

கல்லான் வெகுளும் சிறு பொருள் ஒல்லானை - அரசியல் நூல் அறியாதவனைப் பகைத்தால் வரும் எளியவழிப் பொருளோடு பொருந்தாதவனை; எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது-ஒரு போதும் புகழ் பொருந்தாது.

’சிறுபொருள்’ சிறுமுயற்சியால் வரும் பொருள். சிறு முயற்சியே செய்யமாட்டாதவன் ஒருகாலும் பெருமுயற்சி மேற்கொள்ளானாகலின் ’எஞ்ஞான்றும் .... ஒல்லா தொளி’ என்றார். ஒளி என்பது வாழ்நாட்காலத்து இசை.