பக்கம் எண் :

பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேரா விடும்பை தரும்.

 

பெரியாரைப் பேணாது ஒழுகின் - அறிவாற்றல் மிக்க பெரியாரை அரசர் நன்கு மதித்துப் போற்றாது ஒழுகுவராயின்; பெரியோரால் பேரா இடும்பை தரும் - அது அப்பெரியாரால் அவர்க்கு எப்போரும் நீங்காத துன்பங்களை உண்டாக்கும்.

துன்பங்கள் இருமையிலும் தம்மாலும் பிறவுயிர்களாலும் தெய்வத்தாலும் இடையறாது நேர்வன.அவை தாமே தேடிக்கொண்டவை யென்பது தோன்ற , ஒழுக்கத்தை வினைமுதலாக்கியும் பெரியாரைக் கருவியாக்கியும் கூறினார். இதனாற் பெரியாரைப் பிழைத்தலின் தீமை பொதுவகையாற் கூறப்பட்டது.