பக்கம் எண் :

இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.

 

சிறந்து அமைந்த சீரார் செறின்- மாபெருந் தவமுனிவர் வெகுள்வாராயின்; இறந்து அமைந்த சார்பு உடையவராயினும் உய்யார் - அவரால் வெகுளப்பட்டவர் தலைசிறந்த துணையையுடையவராயினும் தப்பிப் பிழையார்.

சீருடைய தவவலிமை 'சீர்' எனப்பட்டது. 'இறந்தமைந்த சார்பு'கள் சோவரண். மாபெருந் தொல்படை, பேரரையர் நட்பு முதலியன. 'செறின்' என்பதற்கு 897-ஆம் குறளில் உரைத்தவாறுரைக்க. இவ்வைந்து குறளாலும் முனிவரைப் பிழைத்தலின் தீமை கூறப்பட்டது. உம்மை உயர்வு சிறப்பு.