பக்கம் எண் :

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.

 

(இ-ரை) பேணாது பெண்விழைவான் ஆக்கம் -தன் ஆண்மை மேம்பாட்டைக் காவாது தன் மனைவிக்கு அடிமையாகுமளவு அவளைக் காதலிப்பவன் பெற்ற செல்வம்;பெரியது ஓர் நாணாக நாணுத் தரும்-தன்பாலார்க்கெல்லாம் மிகுந்த நாணமுண்டாகுமாறு தனக்கு வெட்கக் கேட்டை விளைவிக்கும்.

'ஆக்கம்' என்று அடைகொடாமற் கூறியது,முதுசொம் என்னும் முன்னோர் தேட்டாகவோ மனைவிவழிச் சொத்தாகவோ பெறப்பட்டதென்றுகுறித்தற்கு.பெண்வழிச் செல்வானுக்குப் பொருளீட்டும் ஆற்றலிராதென்பது கருத்து.செல்வத்தை நுகர்ந்தும் ஈந்தும் பயன்படுத்துபவள் மனைவியாதலின் ,ஆண்மைத் தன்மை அவளிடத்தும் பெண்மைத்தன்மை கணவனிடத்தும் உள்ளனவென்று ஆடவர் நாணிக் கடிந்துரைத்தபின், அவரை மீண்டும் பார்த்தற்கு அவன் நாணுதலால், 'நாணாக நாணுத் தரும்' என்றார்.