பக்கம் எண் :

இல்லாள்கட் டாழ்ந்த வியல்பின்மை யெஞ்ஞான்று
நல்லாரு ணாணுத் தரும்.

 

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு இன்மை- ஒருவன் தன் மனைவிக்குப் பணியும் ஆண்மையின்மை; எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும்- எப்போதும் , அஃதில்லாத நல்லாடவருடன் பழகும்போது அவனுக்கு நாணத்தைப் பிறப்பிக்கும்.

ஆடவனுக்கு ஆண்மை இயல்பாதலின், அஃதின்மை இயல்பின்மையாயிற்று. அண்ணாளன் என்றும் பெண்ணிற்கடங்கி யென்றும் பிறர் பழிப்பதாலும், அதற்கேதுவான ஆண்மையின்மை ஒருகாலும் நீங்காமையாலும், 'எஞ்ஞான்றும் நாணுத் தரும்' என்றார்.