பக்கம் எண் :

மனையாளை யஞ்சு மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.

 

மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனைவிக்கு அஞ்சி நடக்கும் மறுமைப்பயன் இல்லாதவனது; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று-வினைமுயற்சி வெற்றிபெறுவதில்லை.

இல்லறஞ்செய்தற் குரிய உரிமையின்மையின் 'மறுமையிலாளன்' என்றும், ஆண்மையின்மையின் 'வீறெய்தலின்று' என்றும், கூறினார்.