பக்கம் எண் :

நட்டார் குறைமுடியார் நன்றற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகு பவர்.

 

நல் நுதலாள் பெட்ட ஆங்கு ஒழுகுபவர்- தாம் விரும்பிய வாறன்றி அழகிய நெற்றியையுடைய தம் மனைவி விரும்பிய வாறே நடப்பவர்; நட்டார் குறை முடியார்-தம் நண்பருக்குத் தேவையானவற்றைச் செய்து தீர்க்க மாட்டார்; அன்றி ஆற்றார்-அதோடு மறுமைக்குத் தமக்குத் துணையான அறமுஞ் செய்ய மாட்டார்.

மனைவியின் விருப்பப்படி யொழுகுதற்குக் கரணியமான நெற்றியழகு பற்றியும், அங்ஙனம் ஒழுகாவிடின் செ்ய்யும் நெற்றி நெறிப்புப் (browbeating) பற்றியும், 'நன்னுதலாள்' என்றார். நட்டார் குறை முடித்தலையும் நன்றாற்றலையும் மனைவியுஞ் செய்யாமையின் இருமைக்கும் வேண்டுவன செய்யப்படா என்பதாம்.