பக்கம் எண் :

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை யில்.

 

எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு - வினைச் சூழ்ச்சித் திறனுடைய உள்ளத்தையும் அதனாலுண்டான செல்வத்தையும் உடையவர்க்கு;பெண் சேர்ந்து ஆம் பேதைமை எஞ்ஞான்றும் இல் - மனைவியொடு கூடுதலாலேற்படும் பேதைமை ஒருகாலத்தும் உண்டாகாது.

இவ்வுலகில் வாழ்வதற்கு எல்லாவகையிலும் இடந்தருவதால் செல்வம் இடனெனப்பட்டது. இடனில் பருவத்தும் (குறள்.218) என்று ஆசிரியர் வேறிடத்துங் கூறுதல் காண்க. இளமைக் காலத்தையும் உள்ளடக்குமாறு 'எஞ்ஞான்றும்' என்றார். பேதைமையாவது விழைதல்,தாழ்தல், அஞ்சுதல், ஏவல் செய்தல், அறம் பொருள் கைவிடுதல் ஆகியவற்றிற்கு ஏதுவான அறியாமை, பெண்வழிச் சேறலால் ஏற்படுங் கேடுகளெல்லாம் இக்குறளால் தொகுத்துக் கூறப்பட்டன.