பக்கம் எண் :

பயன்றூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்றூக்கி நள்ளா விடல்.

 

பயன்தூக்கிப் பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர் - ஒருவனிடமிருந்து பெறக்கூடிய பொருளின் அளவை ஆராய்ந்தறிந்து அதைப்பெறும் பொருட்டுத் தாம் அன்புடையவராகச் சொல்லும் அன்பில்லா விலைமகளிரின் ;நயன் தூக்கி நள்ளாவிடல் - ஒழுக்க வகையை ஆராய்ந்தறிந்து அவரொடு கூடாது விடுக.

பண்பு சொல்லளவாக வாயிலல்லது உண்மையாக உள்ளத்திலில்லாமையால் 'பண்பின் மகளிர்' என்றும், அது அவர் குலவியல் பாதலை உரையளவையால் மட்டுமின்றிக் காட்சியளவையாலும் அறிதல் கூடுமாயின் 'நயன்றூக்கி' யென்றும், பினபு பார்த்தலுமின்றி வரையறவாக விட்டுவிலக வேண்டுமென்பார் 'விடல்' என்றும் , கூறினார்.'நள்ளா' ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்.