பக்கம் எண் :

நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.

 

நிறைநெஞ்சம் இல்லவர் தீயவழியிற் செல்லாதவாறு மனத்தைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலில்லாத ஆடவர்; நெஞ்சில் பிற பேணிப் புணர்பவர் தோள் தோய்வர்- காதலாலும் மதிப்பாலும் உள்ளத்திற் கூடாமல் பொருளையும் ஆதனாற் பெறுவனவற்றையுமே விரும்பி உடம்பால் மட்டும் கூடும் விலைமகளிர் தோள்களைத் தழுவுவர்.

உள்ளத்தாற் கூடாமற் பொருளாசை பற்றி உடம்பால் மட்டும் கூடும் விலைமகளிர், பொருள் கொடுத்தால் அன்று மட்டும் தரும் இன்பத்தின் பொதுமை சிறுமை பொய்ம்மை நோய்களை அறிந்து தம்மனத்தை அடக்கியவர் தோயாராதலின் ,அவரல்லாதவர் தோய்வர் என்றார்.