பக்கம் எண் :

உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரா
னெண்ணப் படவேண்டா தார்.

 

கள்ளை உண்ணற்க - உயிரையும் மதிப்பையுங் காத்துக் கொள்ள விரும்புபவர் கள்ளை உண்ணாதிருக்க; உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க - அங்ஙனமன்றி உண்ணவே விரும்பின், அறிவுடையோரால் மக்களாகக் கருதப்படுதலை விரும்பாதவர் உண்க.

ஆறறிவிற்குரிய மக்கட்பிறப்பையும் அதனாற் பெறக்கூடிய கல்வியறிவையும் பெற்றும், கட்குடியால் அவற்றை யிழந்துவிடுதலால், இயற்கையாகவே அவையில்லாத அஃறிணையினுங் கீழாகிப் பொதுவான உயிரினத்திலும் சேர்க்கப்படார் என்னுங் கருத்துத் தோன்ற , 'எண்ணப்பட வேண்டாதார்' என்றார்.