பக்கம் எண் :

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கா
லுள்ளான்கொ லுண்டதன் சோர்வு.

 

கள் உண்ணப் போழ்தில் - கள்ளுண்பா னொருவன் தான் அதை உண்ணாது தெளிந்திருக்கும் வேளையில்; களித்தானைக் காணுங்கால் - கள்ளுண்டு வெறித்த பிறனைக்காணும்போது; உண்டதன் சோர்வு உள்ளான் கொல்- தான் உண்டபொழுது தனக்கிருந்த மயக்கத்தையும் உவமையளவையாலறிந்து, அதுவும் இத்தகையதே யென்று கருதான் போலும்.

கள்ளுண்டு வெறித்த நிலையின் இழிவை, உவமையளவையாலும் அறிந்தபின்னும் திருந்தாத கட்குடியன் நிலைமை நோக்கி, ஆசிரியர் வருத்திக் கூறியவாறு. 'கொல்' ஐயம்.