பக்கம் எண் :

சீரினுஞ் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

 

சீரொடு பேராண்மை வேண்டுபவர்- புகழொடு மானத்தை நிலைநிறுத்துதலை விரும்புபவர்; சீரினும் சீர் அல்ல செய்யார்- புகழைச் செய்யு மிடத்தும் தம் குடிப்பிறப்பிற் கொவ்வாத இழி செயல்களைச் செய்யமாட்டார். ஏகாரம் தேற்றம்.

எந்நிலைமையிலுந் தளராத மனத்திண்மை யுடைமையால் மானம் பேராண்மை யெனப் பட்டது. சீரினுஞ் சீரல்ல செய்தல் அன்முறையாய்க் கொள்ளையடித்து அறச்சாலை நிறுவுதல் போல்வது.