பக்கம் எண் :

பெருமை யுடையவ ராற்றுவா ராற்றி
னருமை யுடைய செயல்.

 

பெருமை உடையவர்- பெருமைக் கேதுவான பண்பை இயற்கையாக வுடையவர், அருமை உடைய செயல் ஆற்றின் ஆற்றுவார் - பிறராற் செயற்கரிய நற்செயல்களை நெறிப்படி செய்து முடிப்பர்.

".............. பெருமையுடைய ராயினார் தாம் வறிய ராய வழியும் பிறராற் செயற்கரியவாய தஞ் செயல்களை விடாது அவை செய்யுநெறியாற் கடைபோகச் செய்தலை வல்லராவர்.

"வறியராய வழியு மென்பது, முன்பு செய்து போந்தமை தோன்றப் 'பெருமையுடையவ' ரென்றதனாலும், 'ஆற்றுவா' ரென்றதனானும் பெற்றாம்' என்பது பரிமேலழகருரை, இக்குறளாற் பெருமையின் வெளிப்பாடு கூறப்பட்டது.