பக்கம் எண் :

சிறியா ருணர்ச்சியு ளில்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னு நோக்கு.

 

பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு - கல்வியறி வாற்ற லொழுக்கங்களாற் பெரியாரைப் போற்றி அவரைப் பின்பற்றுவோம் என்னும் குறிக்கோள்; சிறியார் உணர்ச்சியுள் இல்லை - அந்நால்வகையிலும் சிறியவராயிருப்பவரின் உள்ளத்தில் தோன்றுவதில்லை.

இம்மனப்பான்மை அறியாமை, செருக்கு, தன்னலம் ஆகிய வற்றால் உண்டாவது. மறைமலையடிகள் காலத்தில் அவர்களைத் தமிழர் போற்றாதிருந்ததே இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாம்.