பக்கம் எண் :

இறப்பே புரிந்த தொழிற்று ஆம்-சிறப்பும்தான்
சீர் அல்லவர்கண் படின்.

 

சிறப்பும் தான்- பெருமையைத் தரும்செல்வம்; கல்வி அதிகாரம், மதிநுட்பம் முதலியவற்றின் மிகுதிதானும்; சீர் அல்லவர் கண் படின் - தன்னைக் கொண்டிருத்தற்குத் தகுதியில்லாத சிறியோரிடம் சேரின் ; இறப்பே புரிந்த தொழிற்றாம் - அடக்கமின்றிச் செருக்கே மிகுந்த செயல்களைச் செய்யும் இயல்பினதாம்.

"உடைப்பெருஞ் செல்வத் துயர்ந்த பெருமை
அடக்கமி லுள்ளத்த னாகி - நடக்கையின்
ஒள்ளிய னல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக்
கொள்ளி கொடுத்து விடல் ."

இவ்விரு குறளாலும் சிறியோ ரியல்பு கூறப்பட்டது.