பக்கம் எண் :

பெருமை பெருமித மின்மை சிறுமை
பெருமித முர்ந்து விடல்.

 

பெருமை பெருமித மின்மை - பெருமைக் குணமாவது பெருமிதத்திற் கேற்ற சிறப்பிருந்தும் அதை யியல்பெனக் கொண்டு அமைந்திருத்தல்; சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல் - சிறுமைக் குணமாவது ஒரு சிறப்பும் இல்லாதிருந்தும் அதைத் தன் மேல் ஏற்றிக்கொண்டு செருக்கின் எல்லைவரை சென்றுவிடுதல்.

இங்கும் மாந்தர் செயல்கள் அவர் பண்பின்மேல் ஏற்றிக் கூறப்பட்டன. 'ஊர்ந்துவிடல்' முடிவிடம்வரை ஏறிச்செல்லுதல் ; குறிப்புருவகம், 'விடும்' என்பது மணக்குடவ காலிங்கர் பாடம்.