பக்கம் எண் :

சிறுமையு ணீங்கிய வின்சொன் மறுமையு
மிம்மையு மின்பந் தரும்

 

சிறுமையுள் நீங்கிய இன்சொல் - விளைவாலும் பொருளாலும் குரலாலும் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல் ; இம்மையும் மறுமையும் இன்பம் தரும் - ஒருவனுக்கு இருமையிலும் இன்பம் விளைவிக்கும் .

இம்மை இன்பமாவது ஐம்புல நுகர்ச்சி பெற்று நோயற்ற நீடு வாழ்வு . மறுமையின்பமாவது விண்ணுலக வாழ்வு அல்லது மண்ணுலக நற்பதவி . இன்சொல் என்பது இன்செயலையுந் தழுவும் .